ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தவெக தலைவர்!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்க முடிவெடுத்த நாள் முதல் அதற்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

தன்னுடைய கட்சிக்கான பெயர், கொடி மற்றும் மாநாடு என தொடங்கிய அனைத்திலும் இவருக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாயிற்று. எனினும் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாமல் அதில் தன் மீது தவறு இருந்தால் சரி செய்து கொண்டு தன் பாதையில் முன்னேற தொடங்கினார் நடிகர் விஜய் அவர்கள்.

இப்படி தன்னுடைய முதல் மாநில அளவிலான பட்டி மாநாட்டை பல லட்சக்க ணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுடன் அரசியல் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பனையூரில் தனது கட்சி ஆலோசனைக் கூட்டத்தையும் சமீப காலத்தில் நடத்தி முடித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ராணுவ வீரர்கள் மட்டும் இன்றி அவர்களுடைய குடும்பத்தினருடனும் சில மணி நேரங்கள் செலவிட்டு இவர் கலந்துரையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.