தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை!! பணி சிறக்க வலியுறுத்தும் தலைவர் விஜய்!!

0
5
Thaveka's next move!! Leader Vijay insists on success!!
Thaveka's next move!! Leader Vijay insists on success!!

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் தற்சமயம் மாவட்ட பொதுச் செயலாளர்களை நியமித்துள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 120 மாவட்ட பிரிவுகளாக பிரித்து திறம்பட ஆட்களை நியமித்து உள்ளார். கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உருவாக்கப்பட்ட இந்த கட்சிக்கு இதுவரை மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகள் மட்டுமே இருந்து வந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் நியமனம் குறித்து ஆலோசனை பனையூரில் நடத்தப்பட்டு இருந்தது. சரியான ஆட்களை தேர்வு செய்ய பலகட்ட விசாரணை நடத்தியுள்ளார்.

தற்சமயம் கட்சியின் நிர்வாக வசதியை அடிப்படையாகக் கொண்டு முதல் கட்ட நடவடிக்கையாக 19 பிரிவுகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தலைவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட இணை செயலாளர்கள், பொருளாளர்கள், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொருளாளரையும் தனியே அழைத்து அந்தந்த மாவட்ட பிரச்சினைகளையும், தேவைகளையும், செய்ய வேண்டிய அத்தியாவசிய விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அத்துடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக அச்சு பதித்த வெள்ளி நாணயம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தனியே பேசிய அவர் உங்களை நம்பி தான் கட்சி ஆரம்பித்து உள்ளேன். திறன்பட நீங்கள் செயலாற்ற வேண்டும். உங்களுக்கு நம் கட்சி தொண்டர்கள் ஒத்துழைப்பு அழைப்பார்கள். எந்தவொரு பிரச்சனை வந்தாலும் எனக்கு தகவல் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous article3 படங்களுடன் வந்த மாபெரும் மாற்றம்!! லெக்ஸஸ் கார், கனவின் சிகரம்!!
Next articleதமிழக அரசு தரும் ரூ 3 லட்சம்.. இவர்களெல்லாம் கட்டாயம் விண்ணபிக்கலாம்!!