சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும், தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியின் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியில் வெளியே வந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து போன்றோர் தெரிவித்திருக்கிறார்கள்
இந்த சூழ்நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சரத்குமார் நேரில் சந்தித்து இருக்கின்றார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சரத்குமார் சென்றிருக்கிறார். அங்கே கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் ஆலோசனை செய்து இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் சரத்குமாருடன் இந்திய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு இருந்திருக்கிறார். தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா போன்றோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இவருடைய கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.