கொரோனாவின் 3-வது அலை அவ்வளவு மோசமாக இருக்காது! -எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு

0
126

கொரோனாவின் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை அவ்வளவு மோசமாக இருக்காது என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று ஊடகத்தில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொழுது தெரிவிப்பது யாதெனில் , கொரோனா தொற்றுகளையும் அதன் மூலமாக உருமாற்றம் அடைந்து இப்பொழுது பரவி வரும் மற்ற தொற்றுகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. டெல்டா ப்ளஸ் கொரோனா வகை மூலம் நாட்டின் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்புள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் விட டெல்டா ப்ளஸ் வகை கொரோனா மிகவும் வீரியம் மிக்கது. இது அதிவேக தன்மையுடன் பரவும் ஒன்றாகும்.

கொரோனா வின் மூன்றாவது அலை உருவானால் கொரோனா இரண்டாவது அலையை விட மோசமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனாவின் இரண்டாவது அலைகளில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனா மூன்றாவது அலை உருவானால் அதனை எதிர்கொள்ள வேண்டும்.

கொரோனாவிற்க்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது மிகவும் தவறு. கோரோனோ முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 30% மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே 90 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Previous articleமக்களே உஷார்!! சத்து மாத்திரை என சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரை! ஒரு பெண் உயிரிழப்பு!
Next article“புதிய மின் இணைப்பு” இனி விண்ணப்பித்த 3 நாட்களில்! அரசின் அதிரடி அறிவிப்பு!