துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

Photo of author

By Parthipan K

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்.

அந்த பூஜையில் துர்கா சிலை வைத்து பத்து நாட்களும் பிரசாதம் வழங்குவது வழக்கம்.விநாயகர் சிலை வைத்து வழிபட்டு இறுதி நாள் அன்று விநாயகர் சிலை கரைக்கப்படுவது போல துர்கா சிலையும் கரைத்துவிடுவார்கள்.இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதில் பலரும் சிக்கியுள்ளனர் .அதில் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.மேலும் மாயமான பலரை தேடி வருகின்றனர்.துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது அசம்பாவிதம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.