திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் நலிவுற்ற நிலையில் இருந்த பன்னீர்செல்வம் கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து பன்னீர்செல்வம் உயிரிழந்து சில நாட்கள் கழித்து புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் அவரது மகன் கோகுல் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் கோகுலின் தாத்தா இளங்கோ வயது 75, மின்சாரம் இல்லாததால் பழுதான மின் விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் வந்ததை அடுத்து இளங்கோவில் கைகளில் மின்சாரம் தாக்கியதும் அவர் பயத்தில் மின் கம்பியை தூக்கி கோகுலின் மீது வீசியுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கியதில் கோகுல் தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக கோகுலை மீட்ட அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோகுலின் தாத்தா இளங்கோ மனமுடைந்து வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தந்தை உயிரிழந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் மின்சாரம் தாக்கி மகனும் சோகத்தில் தாத்தாவும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு காமேஸ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் பெருத்த சோகத்தை உண்டாக்கியது.