ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாரதிய ஜனதா அரசு எந்தவித உதவியையும் செய்து கொடுக்கவில்லை என்றும் மக்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமலும் திகைத்து நிற்கின்றனர்.

நான் முதல் அமைச்சராக இருந்திருந்தால் ஊரடங்கு சமயத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ருபாய் கொடுத்து இருப்பேன். ஆனால் எடியூரப்பாவும் அவரது மகனும் ஊழலில்  ஈடுபடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்டார்கள். மக்களுக்கு எவ்வித உதவியும் செய்ய பாஜகவிற்கு மனமே இல்லை. பாஜகவினர் வாயிலிருந்து வருவது அனைத்தும் பொய் தான். பொய்யைத் தவிர வேறு பேச்சை இல்லை.

அதேபோல் தற்போது பாசவராஜ் பொம்மையின் ஆட்சியும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்காது. அவரது ஆட்சி கூட எந்த நேரத்தில் வேணாலும் கலைக்கப்படலாம். மக்களை ஏமாற்றியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று கூறினார். மேலும் மாநிலத்தில் ஏழை மக்களின் நலனுக்காகவும், அவர்கள் மூன்று நேரமும் குறைந்த விலையில் சாப்பிட வேண்டும் என்பதற்காகவும், இந்திரா என்ற உணவகத்தை கொண்டு வந்தேன்.

அந்த உணவகத்தை மூடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லை. சி.டி. ரவி, இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறி வருகிறார். அன்னபூர்னேஸ்வரி என்ற பெயர் வைக்க வேண்டுமாம். இவருக்கு வரலாறு பற்றி எதுவும் தெரியவில்லை. அதேபோல் ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்குவதாக பிரதமர் கூறிவருகிறார்.

அது அவரின் சொந்த பணத்திலா? மக்கள் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கு தானே செய்கிறார். இதில் என்ன புதுமை. மக்களின் பணத்தை வாங்கி மக்களுக்கே கொடுப்பது சேவையா? அதே போல் மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. முன்பெல்லாம் ஒரு குடும்பத்தின் தேவைக்கு 5 ஆயிரம் போதுமானதாக இருந்தது.

ஆனால் தற்போது 11,000 வரை தேவைப்படுகிறது. மக்கள் வேலை இல்லாமலும், உணவுக்காகவும் பல்வேறு பிரச்சினைகளை தினமும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் சுமை 53 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவின் கடன் சுமை 136 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் பிரதமர் தலைமையிலான பாஜ அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வளவு கடனை உருவாக்கியுள்ளது என்று நமக்கு தெளிவாக தெரிகிறது.

மோடியின் ஆறு ஆண்டு காலத்தில் மிகப்பெரிய சாதனையே இதுதான். கடனை எல்லாம் மக்கள் மீது திணிப்பது மட்டுமே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களிடம் 100 ரூபாயில் 75 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதே கார்ப்பரேட் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து 25 ரூபாய் மட்டுமே முதலீடாக பெறுகிறார்கள். இது ஒன்றின் மூலமாகவே பாஜக அரசு யார் பக்கம் உள்ளார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Comment