விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

0
160

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் 2007-2008 மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதே போல வருமான வரித்துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவை உறுதி செய்தது.

இந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

தாமதமாக கணக்கை தாக்கல் செய்தது,ஒத்துழைப்பு தராதது,சரியான விவரங்களை அளிக்காதது என வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்ட காரணங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து வருமான வரிக்கு மீதமுள்ள வட்டி தொகையை சூர்யா செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்டோர் வாங்கிய சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நீதிமன்றத்தின் கண்டனதிற்குள்ளனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சூர்யாவும் வரி வழக்கில் சிக்கி ஐகோர்ட்டின் கண்டிப்பிற்கு ஆளாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது