காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!

Photo of author

By Parthipan K

காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருடன் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் காதல் திருமணமானது.இருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .அதில் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையின் முடிவில் மஞ்சுளா, தனது கணவனுடன் வாழ விருப்பமில்லை என்றும் பெற்றோருடன் போக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மனைவி பெற்றோருடன் சென்றதால் விரக்தியடைந்த கணவன் கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான அப்பெண்ணும், அவர்களது உறவினர்களையும் கைது செய்யுமாறு கோவிந்தராஜனின், நண்பாகள், உறவினர்கள் கோவிந்தராஜனின் உடலை வாங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு, கோவிந்தராஜனின் உடலை வாங்கி சென்றனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.