கணவனை பழிவாங்க மனைவி செய்த செயல் !!

Photo of author

By Parthipan K

உத்தர பிரதேசத்தில் மனைவியை கொலை செய்ததாக கணவனை கைது செய்தநிலையில் ,சில மாதங்களுக்கு முன் மனைவியை உயிரோடு திரும்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரன் விஜய் சிங் என்பவர் லதா என்ற மனைவியும் ,7 வயதில் ஒரு பெண் குழந்தைகளுடன் அனைவரும் வசித்து வந்தனர் .கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது .இதனால் லதாவின் தந்தை காவல் நிலையத்தில் தன் மருமகன் மகளை கொலை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ,போலீசார் விஜய் சிங்கின் வீட்டில் சென்று அங்கு ரத்த காயம் இருந்தனை கண்ட காவலர் விஜய்யை கைது செய்தனர்.மேலும் விஜயின் மகள் ருத்ரா காவலரிடம், தந்தைதான் அம்மாவை கொலை செய்ததாக கூறியதால் ,விஜய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் ,கொலை செய்யப்பட்ட மனைவின் உடலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், திடீரென லதா உயிருடன் வீட்டுக்கு வந்துள்ளார். அதனை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.மேலும் விசாரணையில் கணவனைப் பழி வாங்கவே உயிருடன் இல்லாதது போல நாடகமாடியது தெரியவந்தது. பொய் புகார் கொடுத்ததற்காக விஜய்யின் மனைவியையும் , மாமனாரையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் இருந்த விஜய்யை விடுதலை செய்துள்ளனர்.