ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!

காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், என்பது நமக்கு தெரிந்ததுதான். புதிதாக உல்லாச வாழ்க்கைக்காக தவரான வழிகளை நாடுவது குற்ற செயல் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் நம்ப கோவையில் நடைபெற்றுள்ளது.

கோவையில் கிழக்கு உதவி கமிஷனர் அருண் மற்றும் பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், பீளமேடு அடுத்த நேரு நகரில், வீரியம் பாளையம் ரோட்டில், தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் மாறி மாறி ஊர் சுற்றிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் மேலும் அதிகரித்தது.. இதை தொடர்ந்து போலீசார் அந்த நபர் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் காந்தி மாநகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ்(வயது21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த நிலையில் பாதியிலேயே படிப்பை விட்டவர்.

அதேபோல் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமன்னா என்கிற 21 வயதான வினோதினி. இவர் கோவையில் நர்சிங் படிக்க வந்துள்ளார். அப்போது வினோதினிக்கும், பிரகாசுக்கும் நட்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் அடிக்கடி 2 பேரும் செல்போனில் பேசிக் கொள்ளவும், காதலாக மாறியதை அடுத்து இருவரும் சேர்ந்து ஊர் சுற்றவும், ஆரம்பித்தனர். மாணவி படிப்பு முடிந்ததும் ஊருக்கு செல்லாமல் காதலருடன் தங்கி ஊரை சுற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது அவர்களுக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்ததை அடுத்து அவர்கள் சிறு, சிறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் வேலைக்கு சென்றும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர்கள்,  குறுக்கு புத்தியாக கஞ்சாவை வாங்கி வந்து விற்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்தே விற்பனை செய்து வந்தனர்.

மேலும் பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் போது அவரது நண்பர்கள் அவரை சூர்யா என்றே அழைத்து வந்துள்ளனர். கஞ்சா விற்க ஆரம்பித்ததும், சூரிய பிரகாஷ் தனது பெயரை சூர்யா என்றே எல்லோரிடமும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தனது காதலி பெயரையும் மாற்ற சொல்லியாதால்,  அந்த பெண் அவர் தனது பெயரை தமன்னா என மாற்றி கொண்டார். இவர்கள் 2 பேரும் சூர்யா, தமன்னா என்ற பெயரிலேயே கோவை பகுதிகளில் உலாவந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு வேறு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா? இதுபோன்று வேறு எங்காவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா? அதுவும் 2¼ கிலோ என்பதால் வேறு ஏதும் பொய் சொல்கிறார்களா?  என்ற நோக்கிலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment