திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்!

Photo of author

By Hasini

திருமணம் ஆகாத ஏக்கத்தில் மேம்பாலத்தில் நின்று வாலிபர் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த போலீசார்!

நெமிலிச்சேரி மேம்பாலத்தில் நின்றபடி தீக்குளித்த வாலிபர், அதை தொடர்ந்து அங்கிருந்து உடலில் தீ பற்றிய நிலையிலேயே கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கிருந்து பார்த்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. 55 வயதான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சத்யநாராயணன் இருபத்தி ஆறு வயதானவர், இளைய மகன் சூரியநாராயணன் 24 வயதானவர் என்றும் தெரிந்தது.

இதில் இளைய மகன் சூரியநாராயணனுக்கு திருமணம் ஆன நிலையில் மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று விசாரித்துத் தெரிந்துகொண்டனர். சத்தியநாராயணன் திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி வடபழனியில் உள்ள சங்கர மடத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நெமிலிச்சேரி மேம்பாலத்தில் சென்றபோது சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். பின் வண்டியில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் சேகரித்து 20 அடி உயரம் உள்ள பாலத்தின் மீது ஏறி நின்று, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

அவர் உடலில் தீ பற்றி எரியத் தொடங்கியது. உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையிலும், எரியும் தீயுடன் அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், உடல் முழுவதும் தீயில் கருகியதால் சம்பவ இடத்திலேயே சத்யநாராயணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தனக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.