சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

0
222
Earthquake in Chennai! Tsunami alert?
Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை கடலை ஒட்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் குறைவான பாதிப்பு உணரப்பட்டது என கூறுகின்றனர். குறிப்பாக சென்னையில் விசாகப்பட்டினம்  மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் கடற்கரை பகுதிகளில் குறைவான நிலநடுக்கத்தின் தாக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் ஆழ்வார்பேட்டை திருவல்லிக்கேணி பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வானது 12.35 மணி அளவில் சென்னையில் காணப்பட்டது. மேலும் இந்த நில அதிர்வானது கடல் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது, என நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது. ஆனால் அவ்வாறு சுனாமி ஏற்படுவதற்கான எந்தவித எச்சரிக்கையும் தற்பொழுது வரை கொடுக்கவில்லை. பெரிய அளவிலான நிலநடுக்கமானது 6 க்கும் மேலான ரிக்டர் அளவில் காணப்படும். அப்பொழுதுதான் அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் அளவு 5.1 ஆக இருப்பதால் அதிக அளவு பயப்பட தேவையில்லை என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறியுள்ளனர். அதேபோல சென்னையில் ஏற்படும்பொழுது அதேநேரத்தில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆந்திராவின் காக்கிநாடா வங்கக் கடலின் கிழக்கே உள்ள தான் அப்பகுதிகள் நில அதிர்வுகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.