ஓரின சேர்க்கையாளர்கள் செய்த செயல்! புது மணப்பெண் எடுத்த திடீர் ஓட்டம்!
கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு கலாச்சாரங்கள் பல நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன் நீதிமன்றம் திடீரென, அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் இப்போது பல குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்று அனைவரும் என்னும் வண்ணம் உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் இஷ்டப்படி இருக்கலாம், என்றும் அடுத்தவரின் மனைவியை விரும்பினால் ஏற்று கொள்ளலாம் என்றும் சில ஆணைகளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து அப்படி செய்தார்களோ? என்னவோ?
சேலம் அருகே தலைவாசலில் ஒரு கல்லூரி உள்ளது. அதில் கள்ளகுறிச்சியை சேர்ந்த 19 வயதான ஒரு பெண்ணும், அதே போல் கள்ளகுறிச்சி தகரை பகுதியை சேர்ந்த 20 வயதான இரண்டு பெண்கள் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் நண்பர்களான ஆக இருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் இருவரும் மாயமாகி விட்டனர். இதன் காரணமாக அந்த மாணவிகளின் பெற்றோர் கள்ளகுறிச்சி போலீசிடம் புகார் மனு ஒன்றை தந்தனர். எனவே போலீசார் இதை வழக்காக பதிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை மூன்று தனிக் குழுக்களாகப் பிரிந்து தேடிவந்தனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தநிலையில் அவர்கள் இருவரும் சென்னையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதில் அந்தப் பெண்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், நாளடைவில் அவர்களுக்குள் இருந்த காதல் அதிகரித்து, ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறியதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் அதில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்த நிலையில், தனது தோழியை மறக்க முடியாமல் தவித்த அந்த பெண்ணுக்கு, திடீரென தன் தோழி தன்னை பார்க்க வந்து, மீண்டும் சந்தித்ததன் காரணமாக அவருடன் சேர்ந்து, சென்னை கிளம்பி போய் விட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் அங்கு போய் திருமணமான பெண் மற்றும் ஆண் போலும், திருமணமான பெண் தன்னை ஆணை போல் மாற்றிக் கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி, கேண்டீன் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கணவன் மனைவியாகவே அவர்கள் வாழ்ந்தும் வந்துள்ளனர். தற்போது அவர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை சேலம் அழைத்து வந்ததோடு, அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாருங்கள் மக்களே இப்படியும் பலர் இருக்கிறார்கள்.