தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

Photo of author

By Gayathri

தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

Gayathri

Updated on:

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் தற்பொழுது உள்ள நிலையானது பெரும்பாலும் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதாவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் மற்றும் சிலர் தன்னுடன் வருபவர்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டு அராஜகம் செய்வதாக தயாரிப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

உதாரணமாக நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய குழந்தைகளை படப்பிடிப்பு தளத்தில் கவனித்துக் கொள்வதற்காக உடன் வரும் ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இதனைப் போல தான் நடிகர் பாபி சிம்ஹா செய்திருக்கிறார். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். பொதுவாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் ஹீரோவாக வில்லனாக அல்லது குணச்சித்திர நடிகனாக கதைக்கு ஏற்றார் போல் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க கூடிய சிறந்த நடிகராக விளங்குபவர்.

 

இவரும் சூட்டிங் ஸ்பாடிருக்கு அசிஸ்டன்ட் ஒருவருடன் வந்து, என்னுடைய அசிஸ்டன்டுக்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் தர வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். இதனை திட்டவட்டமாக தயாரிப்பாளர் அவர்கள் மறுத்திருக்கிறார்.

 

பாபி சிம்ஹா அவர்கள் தற்பொழுது தமிழில் தடை உடை மற்றும் தெலுங்கில் சளார் பார்ட் 2 வில் தான் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் எந்த படப்பிடிப்பு தளத்தில் இவர் இந்த வேலையினை செய்தார் என்று நெட்டிசன்கள் உட்பட ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.