தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்!

0
136
The actor who issued a statement on the audit law!
The actor who issued a statement on the audit law!

தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்!

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நாசர் அவர்கள் மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை சட்டம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. அது தொடர்ந்து இருக்கும், இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின் போது, அந்த கால திரைப்படங்கள் அந்த உணர்வை மக்களிடையே பரவ செய்வதற்கான காட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காணக்கிடைக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சமுதாய தீர்வை கொண்டு வந்ததில் திரைப்படங்களுக்கு பெரும்பங்கு உள்ளன. இன்றைய சூழலில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருக்கும். இந்த புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துகளை முடக்கும் வகையில் இருக்கின்றது.

அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளுக்கு என்றும் செவிசாய்க்க வேண்டும். மேலும் அதில் அதை கருத்தில் கொள்ளவும் வேண்டும். தமிழக மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து, அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது. அவருக்கும் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது கடமையாகும் எனவே முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இதுவே அந்த அறிக்கையின் மூலம் நாசர் கூறியிருக்கிறார்.

Previous articleபெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!
Next articleகொரோனா தொற்று உறுதியானால் எதிராளிக்குத் தங்கப்பதக்கம்!! ஒலிம்பிக் கமிட்டி அதிரடி!!