பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!

0
160

இந்துக்களின் மிகப் புனிதமான மாலை என்பது ருத்ராட்சம் ஆகும். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் சைவர்கள் கையில் ருத்ராட்சம் இல்லாமல் இருக்காது. சிவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகின்றன. சிவன் மட்டுமின்றி அம்பாள், விநாயகர், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களும் ருத்ராட்சம் அணிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பொதுவாக சாதுக்கள் என்றாலே ருத்ராட்சம் அணிந்த கோலம் தான் நம் கண்களில் வரும். சாமியார்கள் மட்டுமல்லாமல் ருத்ராட்சம் அணிவது அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கிறது.
ருத்ராட்சம் என்பது சிவனின் அடையாளமாக இருப்பதால் பெண்கள் அணியக் கூடாது என்று அனைவரும் கூறுவார்கள். இந்த கருத்தானது மிகவும் தவறு. இந்த புவியில் பிறந்த எந்த ஒரு மனிதனும் ருத்ராட்சம் அணியலாம்.

சிவனை எடுத்துக்கொண்டால் சிவன் இல்லையேல், சக்தி இல்லை அதேபோல், சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவன் மட்டும் ருத்ராட்சம் அணிய வில்லை அர்த்தநாரீஸ்வரராக அவர் இருக்கும்போது, சக்தியுமே அதை அணிந்து தான் இருப்பார். எனவே, பெண்கள் ருத்ராட்சம் அணிய கூடாது என்பது எதுவும் உண்மை அல்ல. ருத்ராட்சம் அணிவதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் அணியலாம்.

காலை, மாலை என எந்த நேரம் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். சிலர் குளிக்கும்போது ருத்ராட்சத்தை கழட்டி வைக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்பார்கள். ருத்ராட்சம் போட்டுக்கொண்டும் குளிக்கலாம். தண்ணீரில் ருத்ராட்சம் படும்போது அது பாதிக்கப்படுவதில்லை. வெந்நீரில் குளிக்கும் போது உடலில் போடப்படும் இரசாயனம் கலந்த சோப்பு காரணமாக ருத்திராட்சம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

ருத்ராட்சம் வாங்கியதும் அதை எப்படி அணிய கூடாது. ஒரு வாரத்திற்கு பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டு.ம் ஒரு வாரம் கடந்த பின் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தி, திருநீறு போட்டு நாள் முழுவதும் வைக்கவேண்டும். அடுத்த நாள் தண்ணீர் விட்டு பசும்பாலில் கழுவி, அலசி, ருத்ராட்சத்தை பூஜை, மந்திரங்கள் சொல்லி அணியவேண்டும். பிறப்பு, இறப்பு போன்ற நாட்களில் ருத்ராட்சத்தை அணியக்கூடாது.

செயற்கையாக தயாரிக்கப்பட்ட ருத்திராட்சங்கள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டன. செயற்கையாக தயாரிக்கப்பட்ட ருத்ராட்சத்தை பயன்படுத்த வேண்டாம். அதனால் எந்தவிதமான பலனும் கிடைக்காது. இயற்கையான ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் அனுகூலம் கிடைக்கும்.

author avatar
Jayachithra