ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? 

Photo of author

By Vijay

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? 

Vijay

The actor who received a slap on the cheek 17 times for just one scene.

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..??

சினிமா என்பது ஒரு கலை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே அந்த கலையை சிறப்பாக செய்ய முடியும். அதிலும் நடிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடியும். உண்மையில் படத்தில் பார்க்கும்போது அந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்க வேண்டும்.

இதுபோன்று பெயர் வாங்குவதற்காக பல நடிகர் நடிகைகள் போராடி வருகிறார்கள். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல சிலர் தயாராக உள்ளனர். தற்போது கூட அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது ஒரு நடிகர் ஒரு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 17 முறை கன்னத்தில் அறை வாங்கியுள்ளார். இதனை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர்.
அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் தான். இவரும் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான பரிந்தா என்ற படத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. மேலும் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் காட்சி ஒன்றில் அனில் கபூரை நடிகர் ஜாக்கி ஷெராப் கன்னத்தில் அறைய வேண்டுமாம். இந்த சீனில் முதல் ஷாட்டிலேயே இயக்குனர் ஓகே என்று கூறிவிட்டார். ஆனால் அனில் கபூருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அந்த காட்சியை மட்டும் திரும்ப திரும்ப எடுக்க சொல்லி கிட்டத்தட்ட 17 முறை அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார்.
அதன் பின்னரே அனில் கபூர் திருப்தி அடைந்துள்ளார். இயக்குனரே அந்த காட்சி ஓகே என்று கூறியும் ஒரு நடிகரான அனில் கபூர் தனக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியை எடுத்து திருப்தி அளிக்கும் வரை நடித்துள்ளது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அவரின் அர்ப்பணிப்பை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.