நடிகர் ரோபோ ஷங்கரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர்!! அதிர்ந்து போய் நின்ற நடிகை!!

Photo of author

By Gayathri

நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் தன்னுடைய சினிமா பயணத்தை சின்னத்திரையில் ஆரம்பித்து படிப்படியாக வெள்ளி திரைக்கு வளர்ந்தார்.

இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து காமெடி நடிகர் ஆக நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமின்றி துணை நடிகராகவும் பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சமீப காலத்தில் இவருடைய மகள் திருமணம் மற்றும் வளைகாப்பு விழாக்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோபோ சங்கர் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து ரோபோ சங்கர் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு :-

ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நானும் விஷால் சாரும் பேசிட்டு இருந்தோம். அப்போ புதுமுக நடிகை ஒருத்தவங்க அன்னைக்கு தான் ஷூட்டிங் வந்துருந்தாங்க. அவங்க முன்னால நான் உங்கள அடிக்கிறேன். நீங்க சும்மா நடிங்கன்னு நடிகர் விஷால் அவர்கள் கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து ரோபோ சங்கர் கூறுகையில், சொன்ன மாதிரி ஓங்கி பளார்னு என்ன அறைஞ்சிட்டாரு. எனக்கு கண்ணு கலங்கிருச்சு. உங்களுக்கு ஷூட்டிங் இருக்குன்னு தெரிஞ்சும் சாப்பிட போய் இருக்கீங்க. சாப்பாடு ரொம்ப முக்கியமா? பணத்தை கொட்டி படம் எடுக்குறோம். உங்களுக்கு பொறுப்பேயில்ல…

எப்போ பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு. ஒருநேரம் சாப்பிடலன்னா உலகம் அழிஞ்சு போயிருமா? அப்படின்னு என்ன கண்டபடி திட்டிவிட்டார்.

அதனைப் பார்த்த அந்த நடிகை இயக்குனரிடம் சென்று சார் எனக்கு உடனே டிக்கெட் போட்டு கொடுங்கள் நான் சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டார் என்று ரோபோ சங்கர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்தப் பெண் இயக்குனரிடம் பேசும் பொழுது ரோபோ சங்கர் சாரிடம் இவ்வளவு கண்டிப்பாக விஷால் சார் இருக்கும் பொழுது எனக்கு பயமாக உள்ளது நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று அந்த நடிகை கூறிவிட்டாராம். இதனை சாதாரணமாக ரோபோ சங்கர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இது ரசிகர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் பல இதனை கேட்டுவிட்டு ஜாலிக்காக செய்யக்கூடிய விஷயமா இது என்று விஷாலை மிகவும் கடிந்து கொண்டனர்.