ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

0
8775
The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!
The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள்.

இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் கழுவி ஊற்றி வருகிறார்கள். மேலும் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ் டேக்கையும் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினியை பிரபல நடிகை ஒருவர் வாடா என்று அழைத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை குஷ்பு தான். ரஜினி நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் படம் தான் குஷ்புவின் முதல் தமிழ் படம். அதில் குஷ்பு பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அந்த சமயத்தில் தான் குஷ்பு மும்பையில் இருந்து வந்ததால் அவருக்கு தமிழ் தெரியாதாம். ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டும் தான் தெரியுமாம். இப்படி ஒரு சூழலில் ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த ரஜினியை வாங்க என்று சொல்வதற்கு பதிலாக வாடா என்று குஷ்பு சொல்லிவிட்டாராம். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதற ரஜினியோ மிகவும் கூலாக சிரித்து கொண்டே அங்கிருந்து சென்று விட்டாராம்.

அதன் பின்னர் நடிகர் பிரபு குஷ்புவிடம் சென்று கூறிய பிறகு தான் அவருக்கு புரிந்ததாம். அதனை தொடர்ந்து பிரபு தான் குஷ்புவிற்கு தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ரஜினி குஷ்புவுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ..?? நாட்டாமை நடிகரை பங்கமாக கலாய்த்த பிரகாஷ் ராஜ்..!!
Next articleஅண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!