பிரேமம் நாயகன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை! அதிர்ச்சியில் மலையாள சினிமா! 

Photo of author

By Rupa

 

பிரேமம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த மலையாள நடிகர் நிவின் பாலி மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மலையாளத்தில் வெளியான பிரேமம், பெங்களூரு டேஸ், வடக்கன் செல்பி போன்ற படங்கள் மூலமாக பிரபலமான நடிகர் நிவின் பாலி தமிழில் நேரம் படத்திலும் நடித்தார். இவர் தற்பொழுது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நடிகர் நிவின் பாலி மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இந்த அறிகை வெளியான பின்னர் சினிமாவில் இருக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை பற்றி அதிகமாக பேசத் தொடங்கியுள்ளனர். பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் நடிகர் நிவின் பாலி அவர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். நிவின் பாலி உள்பட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்த அந்த நடிகை “படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிவிட்டு நிவின் பாலி மற்றும் அவருடன் சேர்த்து 6 பேர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள்” என்று அந்த நடிகை சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு எர்ணாகுளம் மாவட்டம் ஊன்னுக்கல் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஊன்னுக்கல் காவல் நிலையம் நடிகர் நிவின் பாலி உள்பட 6 பேர் மீது பிணையில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த நடிகை அளித்த புகாரில் ஸ்ரேயா என்ற பெண்ணின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த ஸ்ரேயா என்ற பெண்தான் பாதிக்கப்பட்ட நடிகையை நவம்பர் மாதம் துபாய்க்கு வரச் சொல்லியதாகவும் துபாயில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் நிவின் பாலி உள்பட 6 பேர் பாலியல் தொந்தரவுகளை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரேயா என்ற பெண் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் நிவின் பாலி அவர்கள் “தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வழக்கு ஆதாரம் அற்றது. இது முற்றிலும் பொய்யான புகார். இந்த வழக்கு போலி என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன். இதை நான். சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு இதில் இருந்து மீண்டு வருவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இதற்கு முன்னதாக பல பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், நடிகர் சித்திக், இந்த ஜெயசூர்யா, இயக்குநர். ரஞ்சித், மணியம் பிள்ளை ராஜூ ஆகியோர் மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயசூர்யா மீது 2 பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.