இயக்குநர் அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!!அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! 

0
61
The actress who released the film update before informing the director!! The new information about her next film is also out!!
The actress who released the film update before informing the director!! The new information about her next film is also out!!

இயக்குநர்  அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!! அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!!

அதிதி ஷங்கர் இந்திய திரைத்துறை  நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.  இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பல வெற்றி படங்களை இயக்கி எஸ்.ஷங்கரின் மகள். மேலும்  இவர்  திரையுலகில் மட்டுமின்றி பல திறமைகளையும் கைவசம் வைத்திருப்பதாக பலர் பாராட்டி வருகிறார்கள்.

அதனையடுத்து தற்போது அவர் பிரபல் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். மேலும் அடுத்து அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. அவருக்கு ஜோடியாக நடிகர் அதர்வாவின் தம்பி  ஆகாஷ் முரளி நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்தது. ஆனால் இயக்குனர் இது பற்றி இன்னும் தகவலை வெளியிடவில்லை.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவரிடம் ஒருவர் அடுத்து தளபதி கூட எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அந்த  கேள்விக்கு பதிலளித்த அதிதி, நான் விஷ்ணுவர்தன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின்  இயக்குனர் இன்னும் எந்த ஒரு அப்டேட் தராத போதும் இவர் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jeevitha