இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!!

0
72
Are you not going to act anymore? Actress Samantha's sudden decision!!
Are you not going to act anymore? Actress Samantha's sudden decision!!

இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!!

தமிழ் திரையுலகில் வெற்றி நடைபோடும் முக்கியமான நடிகைகளில் சமந்தா ஒருவர் ஆவார். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய வேறு மொழி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. நடிகை சமந்தா முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் முதல் மகன் நாக சைத்தன்யா –வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண பயணம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. எனவே சென்ற ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தா தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அப்பொழுது தனது உடல்நிலை சரி இல்லை என சென்ற ஆண்டு அறிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்களும், திரைத்துறையில் இருப்பவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சமந்தா மயோசிடிஸ் என்னும் auto immune நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோய்க்காக இவர் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு சிறிதளவு குணமாகி உள்ளார். தற்போது குஷி என்னும் திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா –விற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கிலும் உள்ளது. மேலும் நடிகை சமந்தாவின் Citadel தொடரின் படப்பிடிப்பும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

அந்த வகையில் தற்போது தனது படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அப்டேட்டில் இருக்கும் படங்களை முடித்து விட்டு ஒரு வருடத்திற்கு எந்த படமும் நடிக்க போவதில்லை என்று கூறி வருகிறார்.

எனவே மேலும் சில திரைப்படங்களுக்கு வாங்கி இருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஒரு வருடத்தில் தன்னுடைய உடல்நிலையை நன்கு கவனிக்க போவதாக கூறி உள்ளார்.

author avatar
CineDesk