சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:! அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ் இபிஎஸ்!!

Photo of author

By Anand

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:!அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்,இபிஎஸ்!!

சிறை தண்டனை முடிந்து 8ம் தேதி சசிகலா சென்னை வரவிருக்கும் நிலையில்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தவுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதைலையாகி,பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 8-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து சசிகலாவிற்கு ஆதரவளித்து போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தொடர்ந்து நீக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்தும்,சசிகலா சென்னை வரவிருப்பது குறித்தும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் சென்னையில் உள்ள ராயப்பேட்டை அலுவலகத்தில் செயலாளர்கள் மற்றும் அதிமுக உறுபினர்களுடன்,இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.