என்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!

0
181

தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரையில் திமுக எப்போதும் சிறுபான்மையினரையும், பட்டியலினத்தவர் களையும், வைத்துத்தான் அரசியல் செய்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்த இரு விஷயங்களுமில்லை என்றால் திமுக அரசியல் செய்ததற்கு வழியே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என சொல்லப்படுகிறது.

எப்போதும் ஜாதி, சிறுபான்மையினம் உள்ளிட்ட இரண்டையும் தன் கட்சி கொடியோடு தூக்கிப் பிடித்திப்பது திமுக என சொல்லப்படுகிறது.

அதோடு திமுக தமிழகத்தைப் பொருத்தவரையில் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது ஜாதி மற்றும் மத அடிப்படையிலான கலவரங்களை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால் இது எந்தளவிற்கு உண்மையென்று இன்றளவும் தெரியவில்லை.

தற்போது முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்களே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்து மதத்தை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் என்பது வரலாறு.

அதோடு அவருடைய கூட்டணி கட்சித் தலைவர்களும் பல இடங்களில் இந்துக்களை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார்கள். அதோடு இந்து மத சடங்குகளையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உள்ளிட்டோர் தலைமை தங்கியதாக சொல்லப்படுகிறது.

துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, ஆர் வைத்திலிங்கம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, அமைப்புச் செயலாளர் ஜேசிபி பிரபாகர், சட்டசபை உறுப்பினர்கள் கடம்பூர் ராஜு, பி.ஹட்ச் மனோஜ் பாண்டியன், சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் சேவியர், உட்பட பலர் இதில் பங்கேற்றார்கள் என தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, சட்டசபை உறுப்பினர் தாமாக பொதுச்செயலாளர் விடியல் சேகர்,தெஹடியான்,கரீம் கனி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்முடைய நாடு பல மதங்கள் வேறுன்றியிருக்கின்ற நாடு ஒவ்வொரு மதத்திற்கும் அதற்குரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு மதம் மற்ற மதத்தின் கோட்பாடுகளின் வழியில் குறுக்கிடக் கூடாது. ஜெயலலிதாவும். அதிமுகவும், அனைத்து மக்களையும் நம் மக்களாக நினைத்து ஒற்றுமையை மட்டுமே வேதமாக நினைத்து செயல்பட்டது.அதன் விளைவாகவே இன்று தமிழக மக்கள் சாதி, மத, இன, வேறுபாடுகளின்றி மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது, நாகூர் தர்கா, சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன கட்டைகள் வழங்கியது, ஹஜ் புனித பயணத்திற்கான நிதி அதிகப்படுத்தியது, உலமாக்கள் ஓய்வூதியத்தை அதிகரித்தது, என்று சிறுபான்மை பிரிவு சமுதாயத்திற்கு ஜெயலலிதா செய்த நலத் திட்டங்கள் ஏராளம் என்று தெரிவித்திருக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவைத்தொடர்ந்து அதிமுக தொடர்ந்து சிறுபான்மையினரின் பாதுகாவலனாக என்றும் செயல்படும். வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமல்லாமல் செயலிலும் நாங்கள் இதனை கடைபிடித்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் நோன்பு இருப்போருக்கு இறைவனே நேரடியாக வந்து கூலி தருவான் என தெரிவிப்பார்கள்.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே மதநல்லிணக்கம் தாண்டவமாடும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், அவரது காலத்திற்குப் பிறகும், இப்தார் நிகழ்ச்சி தொடர்ந்து அதிமுக சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட ஹாஜிகள் ஊதியம் உயர்வு போன்ற பல்வேறு திட்டங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிமுக அரசு செய்து கொடுத்திருக்கிறது. ஜெயலலிதா வழியில் சிறுபான்மை சமூக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக என்றுமிருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous article6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?
Next articleதேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!