தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
225

ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு ஜூன் மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வு ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04-4-2022 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது ஜூலை மாதம் 2ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் உள்ளிட்ட சமயங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎன்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக! எடப்பாடி பழனிச்சாமி!
Next articleஇப்படியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியுமா? . திருப்பதி திருமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here