திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா??
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் மீதம் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால்அரையிறுதியை எட்டும் வாய்ப்பு பறிபோனது. அடுத்ததாக முன்னாள் சாம்பியனான மற்றும் கிரிக்கெட் உலகில் அசையாது இடத்தை பெற்ற ஜாம்பவான் அணியுமான ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்து அதன்பின் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் பெற்ற வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் தற்போது 3-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி வருகின்ற 4-ஆம் தேதி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவாக அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஸ் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக தனது நாட்டிற்கு திரும்பினார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதிப்பட தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அடுத்து நடைபெறும் மற்ற உலக கோப்பை தொடர்களுக்கும் திரும்புவது குறித்து அவர் பக்கத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மார்ஸ் வெளியேறியது குறித்து கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிறந்த ஆல் ரவுண்டரான மார்ஷ் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 225 ரன்களும், இரண்டு விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். அடுத்ததாக அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார் என்பது தற்போது நினைவில் கொள்ள வேண்டும்.