வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வரும் படி அழைப்பு விடுத்த அமெரிக்கா பல்கலைகழகம்!! டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

0
89
The American University has called for foreign students to come immediately!! Trump is going to take action!!
The American University has called for foreign students to come immediately!! Trump is going to take action!!

இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அரியணையில் அமர்ந்தார். இதில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பதவியேற்ற பின்னர், நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். குறிப்பாக, குடியேற்றம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இலக்காகக் கொண்டு, பதவியேற்ற முதல் நாளிலேயே மிகப்பெரிய நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு :-

ட்ரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், உடனடியாக நாடு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

நாட்டிற்குள் மீண்டும் நுழைவதில் சிரமத்தைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பான வழி, ஜனவரி 19 மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்பதே.

அமெரிக்க பல்கலைக்கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதன்னுடைய பாடல்களை இசை கச்சேரிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் விட்ட இளையராஜா!! 40 ஆண்டுகால நட்பு முறிவின் பின்னணி!!
Next articleமீண்டும் புதிய உச்சத்தை தொடும் சிலிண்டர் விலை!! கனமழையின் எதிரொலி!!