பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!!
பாஜக மாநில தலைவர் அண்ணமலை தமழிகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த 168 நாட்கள் கொண்ட நடைப்பயணம் அமையும் என்று பாஜக கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.
சில பகுதிகளில் மட்டுமே அண்ணாமலை நேரடியாக கலந்து கொள்வார், மீதி உள்ள பகுதிகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அண்ணாமலையையே முழு நடைப்பயணத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. மேலும், இதை துவக்கி வைக்க மத்திய அமித்ஷா வருகை தர இருக்கிறார்.
இவரைத்தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவரின் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த யாத்திரை ஐந்து கட்டமாக பிரிந்து நடக்க இருக்கிறது.
இந்த நடைபயணத்தின் போது பிரதமர் மோடி மக்களுக்கு செய்து தந்திருக்க கூடிய சாதனைகளை புத்தகங்களாக அச்சிட்டு வழங்கவும், மேலும், அண்ணாமலை பொது மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை அவர்களிடம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நடைபயணம் மேற்கொள்ளும் போது பொதுக்கூட்டம் நடத்தவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையில் புகார் பேட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் தங்களது புகார்களை எழுதி போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நடைபெற இருக்கிறது. இந்த துவக்க விழாவிற்கு அமித்ஷா வருகை தர இருப்பதால், ராமேஸ்வரத்தில் காவல்துறை பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.