வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

0
370
The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!
The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான்.

அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற நாலாம் தேதி சனிக்கிழமை முதல் எட்டாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

மலையினை பத்து வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. அதனைத் தொடர்ந்து மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மலை ஏறும் பொழுது எளிதில் தீப்பெற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

அதுமட்டுமின்றி மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி கிடையாது. இது  போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலும் அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தாலோ மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் அனுமதி தான் தற்போது ஐந்து நாட்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!
Next articleசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே  எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்  சூறைக்காற்று!