மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!

Photo of author

By Parthipan K

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!

மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் மாற்றுகருத்துயில்லா சான்று வழங்குவதற்கு எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணபித்து பெற முடியும்.

மேலும் நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டில் கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உத்ரவாதம் தராது எனவும் காவல் துறையின் மாற்றுகருத்துயில்லா சான்று குறித்து பிரச்சனைகளை தீர்க்க மட்டுமே உதவும் எனவும் சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.