முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கபட்டது.கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது.மக்களும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்ப தொடங்கினார்கள்.
ஆனால் பேருந்தில் கூட்டமாக பயணம் செய்வதற்கு மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டது.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து தளர்வுகள் தளர்த்தப்பட்ட பிறகே பேருந்து சேவை சூடு பிடிக்க தொடங்கியது.அதனை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டுவழங்கப்படும் என கூறியிருந்தது.
அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.அதனை தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கும் பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்தில் பாதி அளவிற்கு ரோஸ் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மாநகர போக்குவரத்து கழகம் விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்ந்த ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து 110 விதியின் கீழ் பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பழைய பேருந்துகளை அனைத்தையும் நீக்கி விட்டு புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் மூலம் கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்துகளும்,விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதனை தொடர்ந்து ஒரு பேருந்து ரூ 42 லட்சம் மதிப்பீட்டில், பிஎஸ் 5 வகை டீசல் பேருந்துகளை வாங்குவதற்கும்,60 சதவீதம் பேருந்துகளை நகரப் பகுதிகளிலும், 40 சதவீதம் தொலைதூர பேருந்து சேவைக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.