மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!
மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது.
மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக வீடுகள் வாடகைக்கு விடப்படும் போது அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் மேலும் இதனை அடுத்து வர்த்தக பயன்பாட்டுக்காக வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு அதற்கான ஜிஎஸ்டி கட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் முன்பு வர்த்தக பயன்பாட்டுக்கான கடைகள் கட்டிடங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வழியானது நடைமுறையில் பதிவு செய்தது. மேலும் வர்த்தக நோக்கில் அந்த கட்டிடங்களை பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சம்பந்தப்பட்ட வாடகை கட்டடத்தை வர்த்தக அல்லாமல் தனிப்பட்ட காரணமாக பயன்படுத்தினால் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.