இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

0
201

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோத உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிரது.

ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்றால் மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோத வேண்டிய சூழல் ஏற்படலாம்.

 இந்நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ஆஸி. அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “ ஒரு ரசிகனாக இந்த போட்டியைக் காண நானும் ஆவலாக உள்ளேன். இந்த போட்டியில் இந்திய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம். நான் இப்படி சொல்வதால் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆசியக்கோப்பைக்கு மட்டும் இல்லாமல் அடுத்து வரும் டி 20 உலகக்கோப்பைக்கும் இந்திய அணி தயாராக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here