மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!
மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திராப் ,சாங்லாங் மற்றும் லாங்க்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்சாய் மற்றும் மகாதேவ்பூர் காவல் நிலையங்களில் எல்லைக்குள் வரும் பகுதிகளுக்கு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.அவர்கள் சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும் ,விசாரணை நடத்தவும் ,மேலும் சோதனை நடத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.