மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

Photo of author

By Parthipan K

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது .

இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை. மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு செல்ல வில்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். திட்டமிட்டபடி கலந்தாய்வு நடக்கட்டும் அதனை நிறுத்தவேண்டாம் என கூறியது. இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 15 ஆம்  தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்களின் நலனுக்காக கவுன்சிலிங்கில் அதிக இடங்களைச் சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிதெரிவித்துள்ளது.