போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில் இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!
சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் ஸ்ரீ சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில் மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனையடுத்து அந்த வாகனங்கள் பந்தயங்களிலும் ,சாகசங்களிலும், குற்ற சம்பவங்களில் போன்றவைகளில் ஈடுபடுகின்றன எனவும் தகவல் வெளியாகிறது.
இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில் கடந்த 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வாகன பதிவின் பலகை இல்லாமல் சென்ற 828 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த வாகன உரிமையாளர்களின் மீது ஏதேனும் குற்றவவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா. அந்த வாகனங்கள் இதற்கு முன்பு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் குற்றச்சம்பங்களில் யாரும் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு வாகன பதிவின் பலகை பொருத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 813 வாகனங்களில் பதிவெண் பலகை பொருத்தி அவை விடுவிக்கப்பட்டது எனவும் கூறினார். 15 வாகனங்களுக்கு எந்த ஒரு ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்ட அனைவரும் வாகன பதிவெண் பலகையை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சாலைகளில் பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை பார்த்தால் பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவிக்கலாம் இதற்கான சமூக ஊடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில் குறுந்தகவல் பரப்பப்பட்டு வருகிறது எனவும் கூறினார். பதிவெண் பலகை மீது ஏதேனும் எழுதினாலும் ,படங்கள், ஸ்டிக்கர் ஒட்டினால் குற்றம் தான் எனவும் அறிவித்தார். ஒரு லட்ச வழக்குகள் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன பதிவெண் பலகை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மீது தினந்தோறும் 300 வழக்குகளும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது தினந்தோறும் 100 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இரண்டு வாரமாக சிறப்பு வாகனத்தணிக்கை செயல்பட்டு வருகிறது. சிறப்பு வாகன தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மட்டும் சுமார் 250 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கவனமாகவும் ,தலைக்கவசம் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.