பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

Photo of author

By Parthipan K

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

Parthipan K

The announcement made by the school education department! Teachers excited!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 81 பதிவேடுகள் மட்டும் இணையத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆசிரியர்கள் பாடத்திட்டம் , பணிப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் பெண் ஆசிரியர் ஒருவர் பணிசுமையால் அழுது புலம்பும் வீடியோகாட்சி   வெளியானது தான் என கூறப்படுகிறது.