பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்!

0
205
The announcement made by the school education department! They must follow this!
The announcement made by the school education department! They must follow this!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளுக்கு சென்று முறையாக பாடம் நடத்துகின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை 50 ல்லிருந்து 60சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடக்க அனுமதி ஆணை பெறாத தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசின் விதிகளை பின்பற்றிய பள்ளிகளுக்கு தொடர்ந்து செயல்பட்டால்  அந்த பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை வழங்கலாம்.மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் குறைந்தபட்சம் மாதம் 12 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும்.

மேலும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதனைதொடர்ந்து அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டம் சிவகங்கை ,நாமக்கல் ,திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு தெளிவாக உள்ளதா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதை தனியார் பள்ளிகளை பொறுத்த வரை அந்த கட்டண குழுவிற்கு அனுப்பி அந்த கட்டண குழுவானது நிர்ணயிக்கக்கூடிய தொகையை சிஇஓ  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்த பின்னரே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்  என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியின் கட்டமைப்பு போன்றவைகளையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleஅண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது! தமிழக அரசுக்கு நாலாபுரமும் குடைச்சல் கொடுக்கும் பாஜக!
Next articleரஷ்யாவின் அதிரடி! உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!