புரியாத புதிராக இருந்த கேள்விக்கு கிடைத்த விடை!!! கேமியோ ரோலில் லியோவில் நடித்த நடிகர் இவர்தான்!!!

0
63
#image_title

புரியாத புதிராக இருந்த கேள்விக்கு கிடைத்த விடை!!! கேமியோ ரோலில் லியோவில் நடித்த நடிகர் இவர்தான்!!!

ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புரியாத புதிராக இருந்த கேள்விக்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது. அதாவது லியோ திரைப்படம் எல்சியுவில் உள்ளதா இல்லையா என்பதற்கும் கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகர் பற்றியும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலக அளவில் இன்று(அக்டோபர்19) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் லியோ திரைப்படத்தை காண்பதற்கு சென்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அதாவது படக்குழு அறிவித்த நடிகர்களை தவிர பல நடிகர்கள் நடித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவல்கள் எல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்பதற்கு லியோ படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

லியோ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததற்கு காரணம் இந்த திரைப்படம் கைதி, விக்ரம் போலவே எல்சியு கான்செப்டில் இணையும் என்பதுதான். அதற்கு ரசிகர்கள் பலமுறை கேட்டும் படக்குழு எதுவும் செல்லாமல் மறுத்து வந்தது.

நேற்று(அக்டோபர்18) அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் லியோ திரைப்படத்தை பார்த்து விட்டதாகவும் லியோ எல்சியுவில் உள்ளது என்றும் பாடிவிட்டு குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். அதற்கு லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேட்டதற்கு “உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டதில் எல்சியூ என்பதற்கு அருகில் கண் அடிக்கும் ஸ்மைலி உள்ளது அதனால் நாளை(அக்டோபர்19) தான் லியோ எல்சியூவில் உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் லியோ திரைப்படத்தை பார்த்த சிலர் சமூக வலைதளத்தில் திரைப்படம் எல்சியூவில் உள்ளது என்று பதிவிட்டு இருக்கின்றனர். மேலும் லியோ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த நடிகர் பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளனர்.

அதன்படி கைதி திரைப்படத்தில் நெப்போலியன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியம் அவர்கள் லியோ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் வாய்ஸ் ஓவரும் லியோ திரைப்படத்தில் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.