திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!!
வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரில் உள்ள ஜங்கா எனும் பகுதியில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது திடீரென நேற்று காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரு ஆண், 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 65 வயதுடைய பெண் மற்றும் பதினைந்து வயதுடைய இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரை இந்த இடிபாடுகளில் இருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், இதில் குழந்தைகள் உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர். இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியானது முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. மற்றொரு பகுதியானது பாதியளவு இடிந்து விழுந்துள்ளது.
இந்த நிகழ்வு நடந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டிருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.
திடீரென்று ஏன் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது என்பதற்கான காரணத்தை தேடி வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.