வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு!

Photo of author

By Parthipan K

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு!

Parthipan K

the-assailant-abducted-the-bank-managers-two-wheeler-police-registered-a-case

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மஞ்சக்கல்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  இளங்கோவன்( 33).இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கியில்  மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார்.அப்போது வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை. மேலும் இளங்கோவன் வாகனம்  காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைதொடர்ந்து இளங்கோவன் நேற்று சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.