செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

0
230
the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case
the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது அதில் பேசிய மர்மநபர் அவர் கொடுக்கும் மொபைல் எண்ணிற்கு பணத்தை அனுப்பும்படி கூறியுள்ளார்.அதனையடுத்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன்  செயலியின் மூலமாக மூன்று தவணைகளாக ரூ23 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் அவர் கேட்ட செல்போன் வீட்டிற்கு வரவில்லை.அதனால் மர்ம நபரை தொடர்பு கொண்ட அந்த வாலிபர் செல்போன் குறித்து கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை.மேலும் வாலிபர் அனுப்பிய பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.அதனை தொடர்ந்து ரூ 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வாலிபர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி!
Next articleதமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!