சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

Photo of author

By Hasini

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

மனிதர்கள் அனைவரும் தன் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டனர் போன்று தெரிகிறது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து.

கோவாவில் இருந்து நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு 8 வயது சிறுமி மற்றும் அவளது குடும்பமான தந்தை, தாய், அண்ணன், மற்றும் தங்கையுடன் டெல்லிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அதே ரயிலில் 33 வயது மதிக்கத்தக்க பிரபு மல்லப்பா என்ற இராணுவ வீரரும் வந்துள்ளார்.இந்த சிறுமி தன் முன்பதிவு செய்த இருக்கையில் அயர்ந்து தூங்கி உள்ளாள்.

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் சத்தாரா மாவட்டம் லோனாட்-சல்பா ரயில் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டு இருந்தது.அப்போது அந்த குட்டி பெண்னின் இருக்கைக்கு அருகே இருந்த பிரபு மல்லப்பா அந்த குழந்தையை கழிவறைக்கு தூக்கி சென்றுள்ளான்.

அங்கே வைத்து சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளான்.ஆனால் சிறுமி கண்விழித்து கத்த ஆரம்பித்ததை தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் சிறுமியை தூக்கி ரயிலின் வெளியே எரிந்து விட்டான் அந்த ஆசாமி.

அந்த சிறுமி தண்டவாளத்தின் அருகே பலத்த காயங்களுடன் நடு காட்டில் விழுந்து கிடந்துள்ளாள்.மறுநாள் காலை அந்த வழியே சென்ற ஊர் பொது மக்கள் சிறுமியை பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் காரணமாக குழந்தை உயிர் பிழைத்தது.

பின் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுமியை தூக்கி வீசும் போது ரயில் மெதுவாக சென்றதால் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளாள்.

இதுகுறித்து, சிறுமி இடம் விசாரிக்கும் போது, அவர் ஒரு இராணுவ வீரர் என்பது மட்டுமே தெரிந்தது.அதனால் அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்த போது சந்தேகத்திற்கு இடமாக 4 பேர்  பெயர்கள் இருந்தது.

பின் போலீசார் பிரபு மல்லப்பாவை கண்டுபிடித்தனர்.அந்த நபர் பணி நிமித்தமாக உத்திர பிரதேச மாநிலத்தில் ஜான்சிக்கு சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் ஜான்சிக்கு விரைந்து சென்று அந்த பிரபு மல்லப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் என்னவென்றால் அந்த 8 வயது குழந்தையின் தந்தையும் ஒரு முன்னால் இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தமாதிரி மனிதர்கள் எப்போதுதான் திருந்துவார்கள், சட்டங்கள் கடுமையாகும் வரை எதுவும் மாற வாய்ப்பில்லை என தெரிகிறது.அரசாங்கம் இந்த விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.