இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது 5 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 260 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 3 வது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸ் என அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார் 17 வது ஓவரை வீச வந்தார் பும்ரா வீசிய முதல் பந்தில் அடிக்க முயன்றார் கே எல் ராகுல் அதை கேட்ச் பிடிக்க அவர் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி இந்த தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உள்ளது.