இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களமிறங்கி ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மித் 140 விளாசினார். பும்ரா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. 148 ரன்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் என 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜெய்ஸ்வால் 78 ரன்களிலும் விராட் கோலி 35 ரன்களிலும் விளையாடி வருகிறது இந்திய அணி 326 ரன்களை துரத்துகிறது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கே எல் ராகுல் களமிறங்க மைதானத்தில் பயிற்சி செய்த நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் பீல்டிங் செய்த போது அருகில் வந்து என்ன தவறு செய்தாய் தொடக்க வீரராக இருந்து 3 வது வரிசையில் களமிறங்குகிறாய் என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார் இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.