cricket: இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டதை மறைக்கிறது இந்திய அணி.
இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டி நடந்து முடிந்துள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நொண்டி நொண்டி நடந்ததார் எனவே அவருக்கு காயம் ஏற்பட்டதை இந்திய அணி மறைக்கிறது. என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் டேமியன் பிளமிங் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் அவர் இவ்வாறு நொண்டி நொண்டி நடந்த பிறகு பந்து வீசிய போது மிதமான வேகத்தில் தான் வீசினார். அவரால் வேகமாக வீச முடியவில்லை. அவர் 120 கி மீ வேகத்தில் பந்து வீசுவதை தான் நான் பார்த்தேன் என்று கூறினார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் எத்தனை ஓவர்கள் வீசினார்கள் என்பது கூட நினைவில் இல்லை என்று கூறினார். மேலும் அவர் பயிற்ச்சியில் பங்கேற்கவில்லை எனவே அவருக்கு காயம் எற்பட்டதை இந்திய அணி மறைக்கிறது என்று கூறினார்.