கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

Photo of author

By Divya

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

*தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும்.

*வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.

*பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும்.

*வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும்.

*வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

*பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.

*பசு நெய்யால் கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் மோட்சம் உண்டாகும். தீராத பணக் கஷ்டம் தீரும்.

*இளநீரை கொண்டு அபிஷேகம் செய்தால் சுப காரியங்கள் நிகழும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

*பச்சை கற்பூரத்தை இடித்து தண்ணீரில் கலந்து அபிஷேகம் செய்து வந்தால் தைரியம் கிடைக்கும்.

*கஸ்தூரி மஞ்சள் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.

*நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து வந்தால் மன நிம்மதி கிடைக்கும்.

*வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.