பீன்ஸ் வகையை சேர்ந்த கொத்தவரை அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும்.இந்த காயில் வேர்க்கடலை தூவி பொரியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.கொத்தவரையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.கொத்தவரையை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகள் சரியாகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய கொத்தவரை சாப்பிடலாம்.
கொத்தவரை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தவரை மாமருந்தாக திகழ்கிறது.கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.
மன அழுத்தம் கட்டுப்பட கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.உயர் இரத்த அழுத்தம் குணமாக கொத்தவரை ஜூஸ் செய்து பருகலாம்.உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகள் அகல கொத்தவரை ஜூஸ் குடிக்கலாம்.
கொத்தவரையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் குறைவயும்.மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சனைகள் சரியாக கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கொத்தவரை சாறு செய்து பருகலாம்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகல கொத்தவரை ஜூஸ் செய்து குடிக்கலாம்.
கொத்தவரை ஜூஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)கொத்தவரை
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி கொத்தவரை காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த கொத்தவரை ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஜூஸாக குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.