கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

0
116

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண் களைப்பு நீங்க

சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும்

கருவளையங்களை போக்க
வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.

கண்கள் வறட்சியின்றி இருக்க
கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருளாக உள்ளது.அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும்.
இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கள் குளிர்ச்சியாக இருக்க  வேண்டுமென்றால் ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். எனவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் பாட்டி வைத்தியமாகவே கருதப்படுகிறது.

Previous articleபச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!!
Next articleநீங்கள் வேலை இல்லாமல் சோர்ந்து போய் உள்ளவரா?? இப்போது விண்ணப்பியுங்கள் உங்களுக்காக வேலை காத்திருக்கிறது!!